வலியின்றி உயிர் பிரியும் தற்கொலை இயந்திரம் !
Wednesday, December 6th, 2017ஒரு பொத்தானை அழுத்திய சில நிமிடங்களில் வலியின்றி உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரத்தை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் டொக்டர் பிலிப் நிட்ச்கே அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதனை நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு பொறியாளர் வடிவமைத்துள்ளார். எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளும் இதற்கு தி சார்கோ கேப்சியூல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து 3டி பிரிண்டர் மூலம் பிரிண்ட் செய்து கொள்ளலாம். அதற்கு முன்னதாக நம் மன நிலையை சோதிக்கும் விதமான சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்தாக வேண்டும். பின்னர் நான்கு இலக்க எண் தரப்படும் அதைப் பயன்படுத்தி இயந்திரத்தின் வகையைப் பதிவிறக்கம் செய்து அதை 3டி பிரிண்டரில் பிரிண்ட் செய்து பயன்படுத்தலாம்.
தற்கொலை செய்யப்போகும் ஒருவர் இயந்திரத்தில் அமர்ந்து ஒரு பொத்தானை அழுதியதும் நீர்ம நிலையில் உள்ள நைட்ரஜன் வாயு ஆக்ஸிஜன் அளவை குறைத்து சில நிமிடங்களில் வலி இல்லாமல் மரணத்தை தழுவச் செய்யும்.
மேலும் சார்கோ இயந்திரத்தில் தடை செய்யப்பட்ட எந்த ஒரு போதைப்பொருளும் பயன்படுத்தப்படவில்லை. இதைப்பயன்படுத்த நிபுணர்கள் யாரும் தேவையில்லை. கேள்விகளுக்கு சரியாக பதிலளிப்பவர் யாராக இருந்தாலும் இதனைப் பயன்படுத்தி சட்ட ரீதியாக அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்றார்.
இதன் சிறப்பம்சம் இயந்திரத்தின் மேல் பகுதியை தனியாக பிரித்து எடுத்து சவப்பெட்டியாகவும் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்பதாகும்.
Related posts:
|
|