நிக்கோனின் புதிய அறிமுகம் Nikon KeyMission 360

Sunday, April 24th, 2016

ஏனைய இலத்திரனியல் உபகரணங்களில் ஏற்படும் விரைவான தொழில்நுட்ப மாற்றங்களைப் போன்று கமெராக்களிலும் விரைவான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய கமெரா ஒன்றினை நிகோன் (Nikon) நிறுவனம் இம்மாதம் 14ம் திகதி அறிமுகம் செய்வதாக இருந்தது. Nikon KeyMission 360 எனும் இக் கமெராவானது 360 டிகிரியில் காட்சிகளை பதிவு செய்யக்கூடியது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜப்பானின் Kumamoto பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதன் அறிமுகம் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர நிகோன் நிறுவனம் மேலும் சில கமெராக்களை வடிவமைத்துள்ளது. இவற்றினையும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள அவை எப்போது வெளியிடப்படும் என்ற தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு,

Nikon Coolpix A300, B500: May 2016

Nikon Coolpix A900, B700: July 2016

Nikon KeyMission 360: October 2016

Nikon DL: June 2016

Related posts: