கொந்தளிக்கும் லாவாவினால் பூமிக்கு ஆபத்து !
Thursday, February 9th, 2017
இப்போதைய நடைமுறை உலகில் பாரிய அளவு மாற்றங்கள் உருவாகிக் கொண்டு வருகின்றது. தொடரும் வறட்சிக்கான காரணம் பூமிக்கு அடியில் ஏற்பட்டுள்ள மாற்றமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலகம் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க காத்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூடிய விரைவில் பல எரிமலைச் சீற்றங்கள் இடம்பெரும் வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளனர்.
அந்தவகையில் புவி வெப்பமடைதல் வேகமாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் அச்சம் வெளியிட்டு வரும் நிலையில்.,
உலகில் பிரமாண்டமான மர்மப் பகுதியாகவும், ஆய்வுகளுக்கு விடையளிக்க முடியாமல் இருக்கின்ற கீஸா பிரமிடு வியக்கத்தக்க வகையில் வேகமாக வெப்பமடைந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது பூமி அழிவிற்கு வந்த எச்சரிக்கையாகவே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கீஸா பிரமிடு என்பது இயற்கை சீற்றங்களுக்கு தாக்கு பிடிக்கும் வகையிலும் உட்பகுதி வெப்பநிலை அதிகரிக்காத வகையிலும் நேர்த்தியாக கட்டப்பட்ட ஒன்று.
ஆனால் தற்போது பூமிக்கு உள் ஏற்பட்ட அதிக வெப்பம் பிரமிட்டின் வாயில்கள் வாயிலாக வெளியே வருகின்றதாகவும், இந்த பிரமிடு வெப்பமடைந்து வருவது உலகிற்கு அச்சுறுத்தல் என்றே விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது நிலதின் கீழ் அதிகளவு ஆழத்தில் இருந்து இந்தப் பிரமிடு கட்டப்பட்டுள்ளது. கிமு 26ஆம் நூற்றாண்டு கட்டப்படதாக கூறப்படும் இது இப்போது வரலாறு காணா வகையில் வெப்பமடைந்து வருகின்றது.
பூமியின் உள்ளே இருக்கும் லாவா குழம்பு (எரி கற்குழம்பு) அதிகளவு வெப்பமடைந்து வருகின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாசாவும் ஆய்வு செய்து புவி வெப்பமடைதல் தொடர்பில் எச்சரிக்கை அடைந்துள்ளதாகவும், பூமியின் வெப்பநிலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இது பாரிய விளைவை ஏற்படுத்தும் எனவும்.,
இதன் காரணமாக பூமியின் காந்தப்புலன் தொடக்கம் அனைத்தும் மாற்றத்தை கூடிய விரையில் பூமி சந்திக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
முன்னைய கால கட்டடங்கள் இயற்கையை தாக்கு பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டவை. அத்தோடு மாயன் இன நாட்குறிப்பு நிறைவைத் தொடர்ந்து பூமி அழிந்து விடுவதாக தெரிவிக்கப்பட்டு உலம் 2012ஆம் ஆண்டுகளில் பதற்றம் அடைந்தது.
அது சதியாலோசனையாளர்களினால் பரப்பப்பட்டது. ஆனாலும் இப்போது லாவாவின் சீற்றம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது என்பதை ஆதார பூர்வமாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் படி பூமி பாரிய அளவு எரிமலை சீற்றங்களுக்கும், பனி உருகி கடல் மட்டம் உயர்வடைந்து நிலப்பகுதிகள் மூழ்கும் அபாயங்கள் எதிர் நோக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் பூமிக்கு ஆபத்து நெருங்கி வருவதாகவும் இந்த ஆபத்தை எதிர்கொள்ள உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் குழு தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வெளிப்படையான போர் அறைகூவல்களும் விடுக்கப்பட்டு கொண்டு வருகின்றது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா இடையே பனிப்போர் வலுப்பெற்று கொண்டு வருகின்றது.
அடுத்து இயற்கையும் தன் பங்கிற்கு சீற்றம் அடைந்து கொண்டு வருகின்றது. உலகம் முழுதும் பல்வேறு வகையான நிலநடுக்கங்கள் அதிகரித்து கொண்டு வருகின்றது அவதானிக்கக் கூடியதாகவே இருக்கின்றது.
Related posts:
|
|