கின்னஸ் சாதனையை பெற்ற நத்தார் மரம்!

Friday, December 15th, 2017

2016 நத்தார் தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்ட நத்தார் மரம் கின்னஸ் சாதனையை பெற்றுள்ளது.

இதற்கான சான்றிதழை பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இது தொடர்பான நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நத்தார் மரநிர்மாணப்பணி உதவிகளில் ஈடுபட்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் இலங்கை துறைமுக அதிகார சபை அதிகாரிகள் மற்றும் நத்தார் மரம் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டவர்களும் கலந்துகொண்டனர்.

Related posts: