ஆஸி ஊடகங்கள் தென்னாபிரிக்க வீரர்களை தொந்தரவு செய்கின்றன!

Tuesday, November 22nd, 2016

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா வென்றுள்ள நிலையில் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தென்னாபிரிக்க வீரர்களை தொந்தரவு செய்வதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் கடுமையாக சாடியுள்ளது.

இது குறித்து தென்னாபிரிக்கா அணி முகாமையாளர் முகம்மது மூசாஜி கூறுகையில்,

அவுஸ்திரேலிய ஊடகங்கள் கடந்த சில நாட்களாக எங்களது அணி வீரர்களை குறி வைத்துத் தாக்கி வருகின்றன. தவறான செய்திகளைப் போடுகின்றன.

பந்தைச் சுரண்டியதாக கூறப்படுவது குறித்து அணிதலைவர் டூபிளஸிஸ் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியும் கூட தொடர்ந்து வற்புறுத்தி வருவது ஏன் என்று புரியவில்லை. இதுவரை 3 முறை அவுஸ்திரேலிய ஊடகங்கள் எங்களது வீரர்களை தொந்தரவு செய்துள்ளனர். இது தவறு, ஏற்க முடியாதது. என கூறினார்.

25col4981150847360_5036136_21112016_aff_cmy

Related posts: