845 இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவில் பாதுகாப்பு கோரியுள்ளனர்!

Saturday, February 10th, 2018

கடந்தாண்டு பிரித்தானியாவில் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட 845 இலங்கைத் தமிழர்கள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக  ஊடகம் ஒன்றுதகவல் வெளியிட்டுள்ளது.

இவர்களில் நூற்றுக்கு 6 வீதமானோருக்கு மாத்திரமே அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனையவர்கள் சமர்ப்பித்த அரசியல் பாதுகாப்புகோரும் விண்ணப்பங்கள் இன்னமும் ஆய்வு செய்யப்படுவதாக பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அரசியல் பாதுகாப்பு கோரியவர்களில் தாம் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாவதாக 50 பேர் ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளதாக குறித்தஊடகம் தெரிவித்துள்ளது

Related posts:


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் சேமநலனுக்காக விசேட வேலைத்திட்டம் - அமைச...
பயங்கரவாத ஒழிப்பு சட்ட மீளாய்வுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் 53...