75% பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021

75 வீதத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு, களனி, ஜயவர்தனபுர, அழகியல் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

பல்கலைக்கழக நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: