3 மாதத்துக்குள் 720 முறைப்பாடுகள் – இலங்கைக் கணினி அவசர நடவடிக்கை குழு!
Saturday, April 7th, 2018நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 720 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என இலங்கைக் கணினி அவசர நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் அதிகமானவை பேஸ்புக் தொடர்பிலேயே பதியப்பட்டுள்ளன என அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ரொஸான் சந்த்ரகுப்த தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாடுகளின் நூற்றுக்கு 75 வீதமானவை போலி கணக்குகள் தொடர்பிலானவை என இலங்கை கணினி அவசர நடவடிக்கைக் குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தொடர்பிலும் கடந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் இலங்கை கணினி அவசர நடவடிக்கை குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் தற்பொழுது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என இலங்கை கணினி அவசர நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|