25 வீத மேலதிக கட்டணம் விதிக்கும் வர்த்தமானி வெளியீடு!

Tuesday, February 8th, 2022

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு நிதியம் என்பனவற்றை 25 வீத மேலதிக கட்டணத்தை விதிக்கும் சட்டமூலத்தில் உள்ளடக்குவதற்கு சரத்துக்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியம் உட்பட பல நிதிகளுக்கு 25 வீத மேலதிக கட்டணம் அறவிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரிக்குட்பட்ட வருமானம் கொண்ட நபர், கூட்டு முயற்சி அல்லது நிறுவனங்களின் வரிக்குட்பட்ட வருமானத்துக்கு 25 வீத மேலதிக வரி விதிக்கும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (07) வெளியிடப்பட்டுள் ளது.

உள்நாட்டு வருமான சட்ட விதிகளின்படி ஏப்ரல் 1, 2020 இல் தொடங்கும் மதிப்பீட்டு ஆண்டில் மேலதிக கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: