2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – உரிய கால எல்லைக்குள் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்து!

Tuesday, September 12th, 2023

2023 ற்கான கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், உரிய கால எல்லைக்குள் மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், பரீட்சைக்கான விணண்ப்பங்கள் ஒன்லைன் முறையில் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனவும் 16.09.2023 ஆகிய திகதிக்கு முன் மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் பரீடசைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ ஆகிய இணைத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 2022ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள், 2023 உயர்தர பரீட்சைக்கு தற்போது மீள விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் திகதி 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரபரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருந்ததுடன் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

000

Related posts: