2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் பணிகள் – தீவகத்தில் ஈ.பி.டி.பியின் பிரசன்னத்தடன் சிறப்பாக முன்னெடுப்பு!

Thursday, February 3rd, 2022

உணவுப் பாதுகாப்பு, புதிய வருமான ஈட்டலுக்கான வழிகள், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுடன் நாடு முழுவதும் கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் பணிகள் என்ற திட்டம் இன்று காலை 8.52 மணிக்கு நாடு முழுவதும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக தீவகத்தின் அனைத்து பிரதேசங்களிலும் குறித்தொதுக்கப்பட்ட நேரத்தில் குறித்த அங்குரார்ப்பணம் நடைபெற்றது.

அரசுசார் பிரதிநிதிகளின் பிரசன்னத்துடன் நாடுமுழுவதும் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வில் தீவகத்தின் வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அந்தந்த பிரதேச சபை பிரதேச சபை உறுப்பினர்கள், ஆளும் தரப்பு ஆதரவு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களின் பிரசன்னத்துடன் கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றுக்க 3 மில்லியன் மற்றும் வட்டாரம் ஒன்றிற்கு 4 மில்லியன் ஒதுக்கிட என நிதி ஒதுக்கீட செய்யப்பட்டு அதற்கான பிரமாணங்கள் குறித்த பயனாளர்களிடம் வழங்கப்பட்டும் கட்டடங்கள் மற்றும் வீதிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இதுவேளை  நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 14 ஆயிரத்து 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இத்த திட்டம் இன்றையதிம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அத்துடன் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் தேவைகள் பொதுமக்களாலேயே அடையாளங் காணக்கூடிய செயன்முறையை முழுமையாகப் பன்முகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: