2021 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்த அரசாங்கம் தயார் – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020

2021 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த தயாராக உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் , நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷமன் ஆகியோர் நடத்திய கூட்டு ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸின் சமீபத்திய இறையாண்மை ஒப்பீட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அத்துடன் கடன்களை பூர்த்தி செய்ய போதுமான இருப்பு உள்ளது என குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதில் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.

அதேநேரம் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், கடன்களைப் பூர்த்தி செய்ய துல்லியமாக இருப்புக்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் முன்னரே நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி மதிப்பீடுகளின்படி, இறக்குமதி மற்றும் எரிபொருள் தொகை குறைக்கப்படுவதால் இலங்கையை சுமார் 2 பில்லியன் டொலர் மிச்சப்படுத்தும் என்றும் இது இருப்புக்களை உயர்த்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தமும் நிராகரிக்கப்படவில்லை என்றும் கப்ரால் தெரிவித்தார். அத்தோடு இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட வீழ்ச்சியை சமாளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை பெற்றுக்கொள்ள இலங்கை ஆர்வம் காட்டவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: