2017 பெப்ரவரியில் உள்ளூராட்சி தேர்தல் – அமைச்சர் பைசர் முஸ்தபா!

Wednesday, September 7th, 2016

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் –  இந்த மாதம் 15ஆம் திகதியுடன் எல்லைநிர்ணயங்கள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாகவும், இதைத் தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தல் 2017இல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் அணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தி தேர்தல் பற்றிய பல விடயங்களைக் தெரிவித்துள்ளார். இதில், தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு 65 நாட்கள் வேண்டும், புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கமைவாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்த இருப்பதை தேர்தல் அணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

faizer_musthafa_004

Related posts: