20 ஆவது திருத்தச் சட்டம் மீதான மனுக்களை ஆராயும் அமர்வு ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவின் முன்னிலையில் ஆரம்பம்!

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் வரைவு மசோதாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்கும் உயர் நீதிமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.
பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரி தலைமையில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழு , வரைவு மசோதாவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்களை பரிசீலனை செய்கின்றது.
இந்த நீதியரசர் குழுவில் புவனேகா அலுவிஹார , சிசி டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்தன, மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கியுள்ளனர். உத்தேச வரைவை எதிர்த்து நேற்று மாத்திரம் மேலும் 21 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன் குறித்த மனுக்களின் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரி யவசம், துணைத் தலைவர் ருவன் விஜேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் பிரிவு தலைவர் மயந்த திஸாநாயக்க, (கபே) முன்னாள் ஆளுநரும், நிர்வாக இயக்குநருமான இயக்குநருமான ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோரும் மனுதாரர்களில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|