12 வயதிலிருந்து தடுப்பூசியை வழங்க அமைச்சர் கெஹலிய இணக்கம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

18 தொடக்கம் 30 வயது வரையானோருக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படுவதை நிறுத்தி, 12 தொடக்கம் 18 வயது வரையானோருக்கு செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரைக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இணங்கம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஷேனல் பெர்னான்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்லவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, உலக சுகாதார நிறுத்தின் பரிந்துரையின் அடிப்படையாக கொண்டு, அமெரிக்கா, பிரித்தானியா, போன்ற நாடுகளில் 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டோருக்கு பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படுவதையும், சுகாதார அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியைய 18 தொடக்கம் 30 வயதுடையவர்களுக்கு வழங்க முடியும் என்றும், சமநேரத்தில் தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்துவதற்காக பைசர் தடுப்பூசியை 12 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|