12 இலட்சத்து 34 ஆயிரத்து 521 பேர் வரட்சியால் பாதிப்பு!

Saturday, August 5th, 2017

நாட்டில் நிலவுகின்ற வரட்சியால், 3 இலட்சத்து 53ஆயிரத்து 623 குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 34ஆயிரத்து 521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

18 மாவட்டங்களிலேயே வரட்சி ஆட்கொண்டுள்ளது என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளதுஇதேவேளை, வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில், 5,000 ரூபாய் பெறுமதியான உலருணவுக் கூப்பன் அட்டையை, 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல், மாதாந்தம் அக்குடும்பங்களுக்கு வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.

வரட்சியால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை இனங்கண்டு, அக்குடும்ப உறுப்பினர்களின் முயற்சியைப் பொது வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

Related posts: