அதிகரிக்கப்பட்ட பெறுமதிசேர் வரி மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

Saturday, April 2nd, 2016
ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட இருந்த பெறுமதி சேர் வரி (VAT) மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி மறு அறிவித்தல் வரும் வரை முன்னர் இருந்தது போன்று 11 % ஆக பெறுமதி சேர் வரி இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: