ரணிலுக்காக மக்களை விரட்டி விரட்டி பிடித்த விஜயகலாவும் ஆர்னோல்ட்டும் – அதிர்ப்தியில் உத்தியோகத்தர்கள்!
Sunday, September 8th, 2019யாழ்.மாநகரசபையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரசன்னத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டுமென யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மையில் பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டவர்களிற்கு கட்டளை வழங்கப்பட்டே அழைத்து வரப்பட்டதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 9.45 மணி நிகழ்விற்கு, காலை 9 மணிக்கே மண்டபத்திற்கு வந்து விட வேண்டுமென்றும், நிகழ்விற்கு வருபவர்களின் வரவு குறிக்கப்படுமென்றும் கறார் தொனியில் குறித்த ஒரு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் அரசு கட்சியின் கூட்டில் நடைபெறும் யாழ் மாநகரசபை திறப்பு விழாவில் 2,200 பேர் கலந்துகொள்வார்கள் என குறிப்பிட்டு, அதற்கான பந்தல், உணவு உள்ளிட்ட உபசரணை செலவாக 2.7 மில்லியன் ரூபா மக்கள் பணத்தை, சபையின் ஒப்புதலின்றி யாழ் மாநகரசபை முதல்வர் வாரியிறைக்க தீர்மானித்திருந்தார்.
யாழ் முதல்வரின் இந்த தீர்மானத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நிகழ்விற்கு 2,200 பேரை அழைக்க வேண்டும் என கங்கணம் கட்டி பட்டதாரிகள் நியமனம் வழங்கப்பட்ட அனைவரும் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தரப்பிலிருந்து கட்டளையிடப்பட்டு அழைக்கப்பட்டனர்.
பல முயற்சிகளை மேற்கொண்டு விரட்டி விரட்டி பிடித்தும் குறித்த அளவானவர்களையே கொண்டுவர முடிந்ததாக ஏற்பாட்டாளர்கள் சலிப்புடன் தெரிவித்தானர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் நோக்கத்துடனேயே இரண்டு கட்சிகளாலும் இவ்வாறு வரவழைக்கு முயற்றி செய்யப்பட்டது. அத்துடன் இவ்விரு கட்சிகளின் அரசியல் நடவடிக்கையால், யாழ் மாநகரசபை மக்களின் வரிப்பணமே விரயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச வேலைவாய்ப்பை தேர்தலிற்காகவும், தனிப்பட்ட அரசியலுக்காகவும் பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகமும் ஒரவகையில் இலஞ்சமும் ஆகும் என புத்திஜீவிகளால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|