மேலதிக பாதுகாப்பு வேண்டும் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Friday, December 20th, 2019


பண்டிகைக்காலத்தில் மேலதிக பாதுகாப்பை கோரி இருப்பதாக, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் போது உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்த தொடர்ந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நினைவு கூர்ந்து எதிர்வரும் நத்தார் பண்டிகையை அமைதியாக கொண்டாடுமாரும் கிறிஸ்தவ மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஆயார் இல்லத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பட்டாசு பொருட்களை பயன்படுத்தி ஒலி மாசுபடுத்துவதை விடுத்து தேவையற்ற செலவுகளை குறைத்தும் ஏழை மக்களுக்கு உதவவேண்டும்.

மேலும் நத்தார் பண்டிகையின் போது அரசாங்கத்திடம் மேலதிக பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

மீண்டும் தாக்குதல் நடாத்தப்படும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அரசாங்கத்திடம் மேலதிக பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது,

அவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவம் குறித்து சில தகவல்கள் தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Related posts: