ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு?

Tuesday, October 1st, 2019

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்று(30) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தநிலையில், ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை நிறைவுசெய்ய இன்னும் கால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எனினும், அதற்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் 1343 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Related posts: