சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Monday, September 30th, 2019ஏப்ரல் 21 தாக்குதல்களை அடுத்து பாரிய வீழ்ச்சியடைந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தாக்குதல்களுக்கு முந்தைய ஆண்டு இதே காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இதுவரை எட்டமுடியவில்லை. தாக்குதலையடுத்து கடந்த மே மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை 71 சத வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 57 சதவீத வீழ்ச்சியும், ஜூலை மாதம் 47 சத வீத வீழ்ச்சியும் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தற்போதைய வருகை படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலை சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளில் அவுஸ்திரேலியா முன்னணியிலும், அதனை தொடர்ந்து இந்தியாவும் உள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|