சுரக்ஷா காப்புறுதி : மாணவர்களுக்கு 777 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!

Thursday, August 1st, 2019

மாணவர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தின் ஊடாக இதுவரை 777 மில்லியன் ரூபா அளவிலான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் காப்புறுதிக்காக கிடைக்கப் பெற்ற கோரிக்கைகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியிருந்தது. இந்த வருட காப்புறுதியின் பெறுமதியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 0112 369 369 அல்லது 0113 641 555 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்

Related posts: