சாதனை மாணவிக்கு ஈ.பி.டி.பி பாராட்டு!

Thursday, September 5th, 2019


57வது தேசிய மட்ட மெய்வல்லுநனர் போட்டியில் 10,000 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்ற வீராங்கனைக்கு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி பாராட்டுக்களைத்;; தெரிவித்துள்ளது.

தேசிய மட்ட 10000 மீற்றர் ஓட்டத்தில் யாழ்.மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தை சேர்ந்த சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவி ஜெயராஜ் சோபனா கனிஸ்ட பிரிவினருக்கான வெண்கலப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டார்.

57வது தேசிய மட்ட மெய்வல்லுநனர் போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான 10,000 மீற்றர் ஓட்டத்தில் சாவகச்சேரி, கோவிலாக்கண்டியைச் சேர்ந்த ஜெயராஜ் சோபனா 1:17:26:12 ஓடி வெண்கலப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டார்.

மிகவும் வறுமைப்பட்ட நிலையிலும் தனது ஆற்றலைப் பாராட்டி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மற்றும் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் பாலச்சந்திரன் மல்லிகா குறித்த மாணவியின் வீட்டிற்குச் சென்று பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் அன்பளிப்பையும் வழங்கினர். நாளாளந்த உணவிற்கே கஸ்ரமான மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி சோபனாவுக்கு மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கனிஸ்ட பிரிவு ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் புவிதரன் மற்றும் கபில்சன் ஆகியோர் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கங்களைப் பெற்றுள்ளனர். கனிஸ்ட பிரிவு பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில்  யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைச் சேர்ந்த மேரிலக்சிகா மற்றும் சுகன்யா ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

வேகநடைப்போட்டியில் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலத்தைச் சேர்ந்த ஆர்.கௌசிகா தங்கப்பதக்கத்தை வென்றார்.

இதேவேளை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியைச் சேர்ந்த ஜெ.சோபனா 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கலப்பத்தக்கத்தை கைப்பற்றினார்.

அத்துடன் பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் அளவெட்டி அருணோதயாக்கல்லூரி மாணவி தனுசங்கவி தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை சேர்ந்த எஸ்.மிதுன்ராஜ் வெள்ளிப்பக்கத்தை சுவீகரித்தார்.

Related posts: