எரிவாயு பற்றாக்குறை நிலைமை சீராகும் – எரிவாயு நிறுவனங்கள்!

Thursday, October 31st, 2019


சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை எதிர்வரும் சில தினங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலையில், குறித்த நிறுவனங்களுக்கு சமையல் எரிவாயு கிடைத்த வண்ணம் உள்ள நிலையில், எதிர்வரும் மூன்றரை மாதங்களுக்கு அவற்றை பராமரிக்க முடியும் எனவும் குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ள போதிலும், அநேக பிரதேசங்களில் சமையல் எரிவாயு பற்றாக்குறை நிலவி வருவதால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எரிவாயு பற்றாக்குறை தற்காலிகமாக இடம்பெற்றதொன்று என சுட்டிக்காட்டிய குறித்த நிறுவனங்கள், சர்வதேச ரீதியில் எரிவாயு விநியோகம் தடைப்பட்டதை தொடர்ந்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் எரிவாயு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன

Related posts: