உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!

Monday, September 30th, 2019

உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை கடந்த 5 வருடங்களுக்கு பின்னர் அதிகரித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதுவரைக்காலமும் பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலையானது கிலோவொன்றுக்கு 50 முதல் 100 ரூபாவரையிலேயே காணப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதுடன், பெரிய வெங்காயத்திற்கான கேள்வி அதிகரித்தமையும் மொத்த விலை அதிகரிப்புக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: