இலங்கையில் ஏழை குழந்தைகள் அதிகளவு ஊட்டச்சத்து குறைப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர் – யுனிசெப்!

Thursday, June 6th, 2019

இலங்கையில் ஏழை குழந்தைகள் அதிகளவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக, யுனிசெப் தெரிவித்துள்ளது.

6 தொடக்கம் 23 மாதங்கள் வரையிலான, 38 வீதமான குழந்தைகள் இந்த பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் இலகுவில் நோய் தாக்கங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குழந்தைகள் வளர்ந்தவுடன், பல்வேறு உடல் ரீதியான சிக்கல்களுக்கும் ஆளாகின்றனர். எனவே அது குறித்து பெற்றோர் அறிந்து செயற்படுத்தல் முக்கியம் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், எவ்வாறு பெற்றோர் தமது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளித்து, பராமரித்தல் என்பது குறித்து யுனிசெப் www.BetterParenting.lk என்ற புதிய இணைத்தளத்தையும் இலங்கைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Related posts: