இலங்கையில் அமுலுக்கு வரும் தடை : மீறினால் கடுமையான நடவடிக்கை!

Saturday, November 30th, 2019


இலங்கையில் யாசகம் எடுப்பது எதிர்வரும் டிசம்பர்முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ரயில்களில் யாசகம் எடுப்பதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை மீறி ரயில்களில் யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களில் யாசகம் பெறுபவர்களை தடுப்பு நிலையங்களுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கில் யாசகம் பெறுவோர் உள்ளனர், இவர்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அழகுபடுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்துவதால் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது


தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்கள் புரிந்து வைத்திருப்பது அவசியம் - அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம...
மாணவர்களின் சீருடையில் மாற்றம் இல்லை - ஜனாதிபதி!
அமெரிக்க அரசுடனான ஒப்பந்தம் இலங்கையைப் போர்ப் பூமியாக்கும் - தயாசிறி ஜெயசேகர!
நாட்டில் கடும் வறட்சி - 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இரு அமைச்சு பதவிகளில் திருத்தங்கள்!