அவுஸ்திரேலியாவுக்கு அனுதாபங்களை தெரிவித்த ஜனாதிபதி!

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயினால் ஏற்பட்டு அழிவுகள் தொடர்பில் அந்த நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசனுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனுடன் நேற்று தொலைபேசியில் உரையாடியபோது, தமது அனுதாபங்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
காட்டுத்தீயினால் தற்போது சுமார் முப்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கை ஐம்பது இலட்சமாக கணக்கிடப்பட்டுள்ள போதிலும் அந்த எண்ணிக்கை இதனை மிகவும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை மற்றும் இடைக்கிடையே ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த நாடு என்ற வகையில் இலங்கையர்களால் தற்போது அவுஸ்திரேலிய பிரஜைகள் அனுபவிக்கும் வேதனையை புரிந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த துயரமான வேளையில், அவுஸ்திரேலிய மக்களுக்காக இலங்கை தேயிலை தொகை ஒன்றினை நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|