அடையாள அட்டை கிடைக்காத மாணவர்கள் தொடர்பு கொள்ள இலக்கம் !

Wednesday, October 16th, 2019


தேசிய அடையாள அட்டை கிடைக்கப் பெறாத க.பொ.த சாதாரணதர செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள், தொடர்புகொள்வதற்கென ஆட்பதிவுத் திணைக்களம் விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கமைய தேசிய அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மேற்படி மாணவர்கள் 011 522 6115 எனும், தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத ஏனைய மாணவர்களுக்கு தங்களது பரீட்சைக்கு முன்னர் உரிய நேரத்தில் பதிவுத் தபால் மூலம் தேசிய அடையாள அட்டைகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts:

பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்ட வரைவு நிதி அமைச்சிடம் முன்வைப்பு - மத்திய ...
அனைத்து தேர்தல் மத்திய நிலையங்களிலும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை - சுகாதார அமைச்சு அறிவிப...
பொசன் போய தினத்தை முன்னிட்டு புலிகள் அமைப்பின் 17 உறுப்பினர்களுக்கு விடுதலை ஜனாதிபதி கோட்டாபய பொதுமன...