ஹம்பாந்தோட்டை துறைமுக கையளிப்பு தொடர்பாக விரைவில் முக்கிய அறிவிப்பு!

Friday, February 3rd, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் பிரதமர் மற்றும் அமைச்சரவை உப குழுவினருடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, எதிர்வரும் சில தினங்களில் அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Hambantota-harbor

Related posts: