ஸ்ரான்லி வீதி புகையிரதக் கடவை மீது மோதியது பட்டா ரக வாகனம் – 15 நிமிடங்கள் தடைப்பட்டது போக்குவரத்து.

Monday, August 13th, 2018

புகையிரதக் கடவை கம்பம் மீது சிறிய பட்டா ரக வாகனம் மோதியதில் புகையிரதக் கடவை கம்பம் சேதமடைந்ததால் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில்  பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது தொடர்பில் தெரியவருவதாவது –

இன்று காலை 9.30 மணிக்கு புகையிரத வருகைக்காக புகையிரத கடவை மூடப்பட்டது.  இந்நிலையில் குறித்த சந்தர்ப்பத்தில் அக்கம்பத்தை கடக்க சிறிய ரக பட்டா வாகனம் முயன்றபோது அது கட்டுபாட்டை இழந்து புகையிரத கடவைக் கம்பம் மீது மோதியது.

இதன் காரணமாக குறித்த கடவைக் கம்பம் சேதமைடைந்தமையால் புகையிரதம் சென்ற பின்னரும் கடவை செயற்படாமையால் குறித்த வீதியின் போக்குவரத்துக்கள் சுமார் 15 நிமிடம் வரையில் தடைப்பட்டது. இதன்காரணமாக ஸ்ரான்லி வீதியில் அதிகளவான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் கடவைக் காப்பாளரது துரித செயற்பாடு காரணமாக துறைசார்ந்தவர்கள் அழைக்கப்பட்டு கம்பம் சீர் செய்யப்பட்ட நிலையில் போக்குவரத்து சேவைகள் 15 நிமிடங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

39024157_1824886110929767_9208050419631128576_n

39020269_2207362382832678_4247512464339501056_n

38996992_448787638973285_7161372630480584704_n

Related posts: