ஸ்மார்ட் அடையாள அட்டை வடிவில் தேசிய அடையாள அட்டைகள்! 

Wednesday, March 14th, 2018

ஸ்மார்ட் கார்ட் வடிவில் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் செயற்பாட்டில் குறைபாடுகள் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின்ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

முன்னைய காலங்களில் அடையாள அட்டைகள் கையால் எழுதப்பட்டு வந்த நிலையில் ஒரே இலக்கம் கொண்ட இரண்டு அடையாள அட்டைகள் மற்றும் பெயர்களில் தவறுகள் என்பனஏற்பட்டிருந்தன.

தற்போது அடையாள அட்டைக்கான இலக்கம் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதனால்  ஒரே இலக்கம் கொண்ட இரண்டு அட்டைகள் தயாரிக்கப்படுவது போன்ற தொழில்நுட்ப தவறுகள்முற்றாக தவிர்க்கப்படுவதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

எம் மீது அபர்த்தமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன - அடியோடு நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டபய ர...
இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட விவகாரம் – ஐ.நா கூட்டத்தொடரில் கலந்து...
இவ்வருடன் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு இலக்கு - இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரி...