வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறையில் சர்ச்சை!

Sunday, December 25th, 2016

நாட்டிலுள்ள அரச வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறையின் போது சுகாதார அமைச்சு மிகவும் சரியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இடமாற்றம் வழங்குவதற்காக சரியான ஒழுங்குமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தும், சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இடமாற்றங்கள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுமாயின் சில வைத்தியசாலைகள் மூடப்படுவதை கூட தவிர்க்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

GMOA

Related posts: