வேலணை பிரதேச சபை மீது காழ்ப்புணர்ச்சிகளால் அவதூறுகள் பரப்பப்படுவதை ஏற்கமுடியாது – கூட்டடமைப்பினரின் உறுப்பினர்கள் ஆதங்கம்!

Friday, January 28th, 2022

பிரதேசத்தினதும் மக்களினதும் நலன்களை மையமாக கொண்டு இந்த ஆண்டில் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு உழைக்க முயற்சிப்போம் என வேலணை பிரதேச சபையின் புதிய ஆண்டுக்கான முதலாவது மாதாந்த அமர்வில் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தியால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் நடைபெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையிலேயே தவிசாளர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

குறித்த சபை அமர்வின்போது – பிரதேச செயலகங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் தவிசாளர் அழைக்கப்படுவதில்லை என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் மக்களுக்கான சேவையை முன்னெடுக்கும் கட்டமைப்பினர் ஒன்றிணைந்து செயற்படாது செயற்படாதுவிட்டால் அதன் நோக்கங்களை எட்ட முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை மரங்களை  வேலணை பிரதேச மக்கள் தவிர வேறு எவரும் வெட்டிக்சென்று பயன்படுத்த முடியாது என சட்டம் இருக்கும் நிலையில் அதில் பிரதேச செயலகம் அலட்சியமாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபையின் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் பசுவதை செய்வதும். சட்டவிரோத மண் கடத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு ஊர்காவற்றுறை பொலிஸ் உடந்தையாக உள்ளது எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பொது அமைப்புகளில் பொறுப்புக்கூறும் பதவி நிலைகளில் பெண்களின் வகிபாகத்தை உறுதிப்படுத்துவது அவசிமானதென்றம் அதை எமது பகுதி ஆளுகைக்கள் வலியுறுத்தும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்த் முன்மொழிவொன்றை சபையில் முன்வைத்திருந்தார்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களை தவிர ஏனைய கட்டமைப்புகளில் சட்டரீதியாக குறிப்பாக பொது அமைப்புகள் மற்றும் மதஸ்தாகங்களில் ஒரு சில இடங்களில் அந்தந்த தரப்பினரது யாப்புகளுக்கு அமைய பெண்களுக்கு பொறுப்புக் கூறும் பதவிநிலை கொடுக்கப்பட்டாலும் அது வலுவான சட்டரீதியாக இதுவரை இல்லாத நிலையில் அவ்வாறானதொரு நிலையை உருவாக்கும் முயற்சியில் அநேக உள்ளூராட்சி மன்றங்களில் இவ்விடயம் பரிந்துரைக்கப்பட்டுவரும் நிலையில் எமது சபையிலும் அதற்கான ஏற்பாடுகளை  செய்வதனூடாக பெண்களின் அந்த முயற்சிக்கு வலுச்சேர்க்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் சபையின் சில ஆண் உறுப்பினர்களது எதிர்ப்புகள் காரணமாக சில திருத்தங்களுடன் குறித்த தரப்பினருக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவின் பரிந்துரையின் பிரதிகள் அனுப்பப்படும் என்றும் அந்த வரையறையை இறுக்கமாக கடைப்பிடிப்பதற்கு விழிப்புணர்வகளை எற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை வேலணை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் மருத்துவர் இன்மை மற்றும் அம்புலன் சேவை மறுப்பு போன்ற காரணங்களால் அண்மையில் மரணமானமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் தியாகராஜா கேமதாஸ் முன்மொழிவு ஒன்று கொண்டுவரப்பட்டது.

அத்துடன் இந்த சம்பவம் வைத்தியசாலையின் அசமந்த போக்கு காரணமாகவே இடம்பெற்றதென்றும் இவ்வாறான நிலைமை இனிவரும் காலங்களில் ஏற்படாத வகையில் வைத்தியசாலையின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க துறைசார் தரப்பினரை வலியுறுத்த வேண்டும் எனவும் அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே கட்டாக்காலிகளை கட்டுப்படுத்தவது தொடர்பான பிரேரண ஒன்றும் சபையின் மற்றொரு உறுப்பினரால் முன்வைக்கப்பட்டது.

இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் ஊடகம் ஒன்று வேலணை பிரதேச சபை மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலரது தூண்டுதலின் பேரில் திட்டமிட்ட வகையில் அவதூறுகளை பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் உறுப்பினர்கள் குற்றச்சாட்டொன்று முன்வைத்திருந்தனர்.

அத்துடன் எமது பிரதேசத்தின் தேவைப்பாடுகளை எமது பிரதேச அல்லது அதனுடன் தொடர்புடைய தரப்பினர் குற்றம் சாட்டினால் கூட பறவாயில்லை. ஆனால் எதுவித தொடர்பும் அற்ற சிலரை அழைத்துவந்து கருத்துக்களை கூற வைத்து எமது பிரதேச சபையின் சேவைகளையும்’ உறுப்பினர்களையும் அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர்கள்  குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் அபிவிருத்திகள் மற்றும் வாகன திருத்தங்களை உடன் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த உறுப்பினர் சின்னையா சிவராசா ஊழியர்களது அசமந்த பொக்கு காரணமாக பல்வேறு செயற்றிட்டங்கள் முடக்கப்பட்டு கிடப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் செயற்றிட்டங்கள் சபைக்கு வருமானம் வருமாக இருந்தால் அவற்றை முன்னெடுப்பதில் பிரச்சினைகள் ஏதும் இருக்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: