வேம்படி பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதி ஒரு வழிப் பாதையாக மாற்றம்!

Saturday, February 16th, 2019

யாழ். வேம்படிப் பாடசாலைக்கு முன்பாக உள்ள 1 ஆம் குறுக்குத்தெரு வீதி 20 ஆம் திகதி முதல் ஒரு வழிப்பாதையாகவுள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் காலை 7 மணி முதல் 8 மணி வரையும் பாடசாலை முடியும் நேரம் நண்பகல் 1 மணி முதல் 2 மணி வரையும் இவ் வீதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் இப்பாதையானது ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது.

மேற்படி நேரங்களில் பிரதான வீதியால் வரும் வாகனங்கள் யாழ் வேம்படிப் பாடசாலைக்கு முன்பாகவுள்ள 1 ஆம் குறுக்கு வீதியூடாக பயணித்து ஆஸ்பத்திரி வீதியினை சென்றடையும். சேர். வைத்திலிங்கம்  துரைச்சாமி வீதி, சப்பல் வீதி ஆகிய வீதிகளினூடாக வரும் வாகனங்கள் ஆஸ்பத்திரி வீதியினை நோக்கி மாத்திரம் பயணிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: