வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசிஆர் மையம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, September 15th, 2021

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மையத்திற்கு விஜயம் செய்திருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதன் சாதக பாதக நிலைமைகள் தொடர்பில் ஆய்வு ஆராய்ந்தறிந்துள்ளார்.

அத்துடன் இந்த மையத்தின் மூலம், கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமது பரிசோதனை முடிவுகளை மூன்று மணி நேரத்திற்குள் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 500 PCR சோதனைகளைச் செய்ய முடியும் என்றும் அதன்படி, இந்த மையம் ஒரு நாளைக்கு 7 ஆயிரம் பிசிஆர் சோதனைகளைச் செய்யும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: