வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்துகை இடைநிறுத்தம் குறித்து சர்வதேச நாணய நிதியம் மதிப்பாய்வு!

Friday, April 15th, 2022

வெளிநாட்டு கடன் மீள் செலுத்தலை, தற்காலிகமாக இடைநிறுத்தும் இலங்கையின் தீர்மானத்தின், விசேட தாக்கநிலை குறித்து மதிப்பாய்வுகளை மேற்கொள்வதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கடன் வழங்குநர்களுக்கு, பணம் செலுத்தும் திட்டத்துக்கு செல்வது குறித்து தமது ஒத்துழைப்பை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் இதனூடாக தெரிவித்துள்ளது.

நாட்டின் நிதி முயற்சிகள் மற்றும் பொருளாதாரக் கொள்கை என்பன மாத்திரம், கடன் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு போதுமானதல்ல என சர்வதேச நாணய நிதிய குழுவின் திட்ட பிரதானி மஸாஹிரோ நொசானி தெரிவித்துள்ளார்.

எனவே, கடன் வழங்குநர்களுடன் ஒத்துழைக்கும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் டொலராகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: