வெளிநாடுகளிலிருந்து மருத்துவ பொருட்களை இலவசமாக கொண்டுவந்து சேர்க்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்வருகை!
Thursday, June 23rd, 2022உலகெங்கிலும் உள்ள நன்கொடையாளர்களால் வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இலவசமாக கொண்டுவந்து சேர்க்கும் பணியை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சமூக பொறுப்புணர்வுப் பிரிவான ஸ்ரீலங்கன் கேர்ஸ் மூலமாக இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய, பிரான்ஸ், இந்தோனேசியா, ஐக்கிய இராச்சியம், மலேசியா, குவைத் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள நன்கொடையாளர்களால் வழங்கப்படும் அவசரகால மருத்துவப் பொருட்களை தொடர்ச்சியாக இலங்கைக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம்: மாணவியின் கருணையால் ஆசிரியர் விடுதலை!
ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் ஜனாதிபதி இன்று விசேட உரை!
மன உளைச்சலே பெறுபேற்று வீழ்ச்சிக்கு காரணம் - இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஸ்டாலின் தெரிவிப்பு!
|
|