வெலிக்கடை சிறைச்சாலை பெண்கள் விடுதியில் திடீர் சோதனை – பெருமளவு கைபேசிகள் மீட்பு!

Monday, September 7th, 2020

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இந்த கைபேசிகள் மீட்கப்பட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைத் திணைக்கள தகவலின்படி, 17 கைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் பிற தொடர்புடைய உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெலிகடைசிறைச்சாலையில் உள்ள கூரைகள் மற்றும் சுவர்களில் இந்த கைபேசிகள் மற்றும் பிற பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வெலிக்கடை மகசின் சிறைச்சாலைக்குள் சுவரால் பார்சல் ஒன்றை வீசியவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பொதியில் கைபேசிகள் பற்றறிகள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றை பொலிசார் மீட்டனர். அத்துடன் சந்தேக நபரிடம் இருந்து பெருமளவு பணத்தையும் பொலிசார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: