வெங்காய விலை அதிகரிப்பு : ஒரு கிலோ 180 ரூபாவாக விற்பனை!

Thursday, December 20th, 2018

யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் சின்ன வெங்காய செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பெரும் போக சின்ன வெங்காய செய்கையின் போது சுமார் 1,900 வரையிலான ஹெக்டேயர் நிலப்பரப்பில் செய்கையாளர்கள் வெங்காய செய்கையில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர்.

தற்போதைய காலநிலையை பயன்படுத்தி செய்கையாளர்கள் சின்ன வெங்காய செய்கையை ஆரம்பித்துள்ளனர்.

வெங்காய விதைகளுக்கு பற்றாக்குறையும் தட்டுப்பாடும் நிலவி வருகின்றன. இந்த பற்றாக்குறையை அடுத்து அனேகமான செய்கையாளர்கள் உண்மை விதைகளை பயன்படுத்தி நாற்று மேடைகளை அமைத்தும் வருகின்றனர். வெங்காய நாற்றுக்களை பயன்படுத்தியே கூடுதலான செய்கையாளர்கள் வெங்காய செய்கையில் ஈடுபடவும் உள்ளனர்.

இதேசமயம் குடாநாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்தும் உள்ளன. சந்தைகளில் இந்த வெங்காயம் கிலோ 180 ரூபாவாக உயர்ந்துள்ளன.

Related posts: