வீதி விபத்துக்களால் 13.5 லட்சம் பேர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!

Monday, December 10th, 2018

உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் ஒவ்வோர் ஆண்டும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

5 முதல் 29 வயது வரையுடைய இளம் வயதினரின் உயிரிழப்புகளுக்கு வீதி விபத்துகள்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.

2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 13.5 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, 24 விநாடிகளுக்கு ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்.

2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 12.5 லட்சம் உயிரிழப்புகளோடு ஒப்பிடுகையில் இது 1 லட்சம் அதிகமாகும். இந்த எண்ணிக்கை, அடுத்த ஆண்டுகளில் இன்னும் மோசமான அளவில் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அனுபவமற்றவர் ஆட்சி செய்தல் இது தான் நிலை - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ
மக்களது சாத்வீகப் போராட்டத்தை வன்முறையாக்க முயற்சித்ததன் அடிப்படையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவி...
அரிசி ஆலைகளுக்கு தனியான கூட்டுறவுச் சம்மேளனங்கள் - வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர்!
நாம் பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் வேலணை பிரதேச சபை பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது – தவிசாளர் கருணாகரகுர...
என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா - நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில்!