வீட்டுப்பாவனை மின்சார பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க தீர்மானம் இல்லை – நிதியமைச்சு தெரிவிப்பு!

Monday, July 5th, 2021

கைபேசிகள், தொலைக்காட்சிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சார வீட்டுப்பாவனை பொருட்களின் இறக்குமதியை தடை செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

சொகுசு இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் முதலானவற்றின் இறக்குமதியை கைவிடுவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நிதி அமைச்சின் செயலாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, தொலைக்காட்சிகள், கைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களையும், வாசனைத் திரவியங்களையும் இறக்குமதி செய்ய தடை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: