வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் 350 முறைப்பாடுகள் – யாழ் மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான தெரிவு தொடர்பில் சுமார் 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மவட்ட செயலகம் தெரிழவித்துள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் யாழ் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு இவ்வருடம் வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கான தெரிவுகள் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்று வருகின்றன.
அதேநேரம் தெரிவுகளில் தமது பெயர் உள்ளடக்கப்படவில்லை என பல முறைப்பாடுகள் வந்து சேருகின்றது. ஆகவே குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கபடுவதோடு தற்போது வெயிடப்படும் பட்டியல் இறுதி பட்டியல் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீடுகளை துப்பரவு செய்வதில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்!
தேசிய தொற்றுநோய் போதனா வைத்தியசாலையாக மாற்றம்பெறும் IDH
16 கோடி செலுத்தவேண்டும் : மின்சார சபைக்கு நீதிமன்று உத்தரவு!
|
|