வீட்டுத்திட்டம் :  பிரதேச செயலக ரீதியாக  ஒதுக்கீடுகள் விபரம்வெளியானது!

Wednesday, December 5th, 2018

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்த வரு­டத்­துக்­கான வீட­மைப்­புத் திட்­டத்­தில் 4 ஆயி­ரத்து 600 வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. மாவட்­டத்­தில் உள்ள பிர­தேச செய­லக பிரிவு­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட வீடு­க­ளின் எண்­ணிக்கை மாவட்­டச் செய­ல­கத்­தால் பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. பய­னா­ளி­க­ளின் விவ­ரங்­களை உடன­டி­யாக அனுப்பி வைக்­கு­மா­றும் அதில் கோரப்பட்டுள்ளது.

இதன் பிர­கா­ரம் நெடுந்­தீவு 50, வேலணை 150, ஊர்­கா­வற்­றுறை 75, காரை­ந­கர் 75, யாழ்ப்­பா­ணம் 175, நல்­லூர் 175, சண்­டி­லிப்­பாய் 250, சங்­கானை 250, உடு­வில் 200, தெல்லிப்­பளை ஆயி­ரத்து 500, கோப்­பாய் 550, தென்­ம­ராட்சி 600,
கர­வெட்டி 250, பருத்­தித்­துறை 150, மரு­தங்­கேணி பிரதேச செயலர் பிரிவுக்கு 150 வீடுகள் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பா­கப் பிர­தேச செய­ல­கங்­க­ள் தெரிவிக்கையில், பட்­டி­யல் வந்­துள்­ளதை உறு­திப்­ப­டுத்­தி­னர். எனி­னும் பய­னா­ளி­க­ளின் விவ­ரங்­களை உடனே அனுப்­பு­வ­தில் சிக்­கல் உள்­ளது என்று தெரி­விக்­கின்­ற­னர்.

பய­னா­ளி­க­ளின் பட்­டி­யல் புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தா­லும், புள்­ளி­கள் அடிப்­ப­டை­யில் தெரிவு செய்­யப்­பட்ட பய­னா­ளி­க­ளின் பெயர் விவரங்கள் தொடர்­பான அறி­வித்­தல்­கள் ஆட்­சே­ப­னை­கள் முறைப்­பா­டு­க­ளுக்­கா­கக் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு ஆட்­சே­ப­னை­கள், முறைப்­பா­டு­கள் கிடைக்­காத பட்­சத்­தில் அனுப்பி வைக்­க­லாம்.

ஏற்­க­னவே தெரிவு செய்­யப்­பட்ட பய­னா­ளி­க­ளில் மாற்­றங்­கள் ஏற்­பட்­டி­ருப்­பின் புதிய பய­னா­ளி­கள் தெரிவு போன்­ற­வற்­றால் தாம­தம் ஏற்­ப­ட­லாம் என்று தெரி­வித்­த­னர்.

வருட இறு­தி­யில் வீட­மைப்­புத் திட்­டப் பட்­டி­யல்­கள் அனுப்­பப்­பட்­டுள்­ள­தால் பய­னா­ளி­க­ளின் பட்­டி­யல் மாவட்­டச் செய­ல­கத்­துக்­குப் பிர­தேச செய­ல­கங்­க­ளால் அனுப்பப்பட்டு அங்­கி­ருந்து மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்கு அனுப்பி அங்­கி­ருந்து அங்­கீ­கா­ரம் கிடைப்­ப­தற்­குள் வரு­டம் முடிந்து விடும்.

வரு­டம் முடி­வ­தற்­குள் வேலைத் திட்­டங்­கள் ஆரம்­பிக்க வேண்­டு­மென்­ப­தால் பய­னா­ளி­கள் ஆரம்­பக் கட்­டப் பணி­களை ஆரம்­பிக்க சிர­மங்­களை எதிர்­நோக்க வேண்டி ஏற்­ப­டு­மென்று பொது­மக்­கள் முறைப்பாடு கூறுவர்.

மாவட்­டத்­தில் தெரிவு செய்­யப்­பட்ட அனைத்து வீட்­டுத் திட்­டங்­க­ளுக்­கும் ஒரே நேரத்­தில் அத்­தி­பா­ரக் கற்­கள், மணல்­கள் பறிக்­கப்­ப வேண்­டும். பய­னா­ளி­க­ளின் அசரத்துக்­காக கற்­கள், மணல் போன்­ற­வற்­றின் விலை­கள் திடீ­ரென அதி­க­ரிக்­க­லாம்.

இத­னால் பய­னா­ளி­க­ளுக்கு வீட்­டுத் திட்­டத்­துக்கு வழங்­கப்­ப­டும் தொகை­யை­விட மேல­தி­க­மா­கச் செலவு ஏற்­ப­ட­லாம் என்று தெரி­வித்­த­னர்.

Related posts: