விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல் – தீர்வைப் பெற்றுத் தருவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் திலீபன் தெரிவிப்பு!

Monday, August 15th, 2022

வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலைமையில் கடந்த சனிக்கிழமை (13.08) இடம்பெற்றது.

இதன்போது விவசாயிகளின் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலப் பயிற் செய்கைக்குரிய நிலங்கள் வன இலாகாவால் எல்லையிடப்பட்டுள்ளமை, தோட்டச் செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரத்திற்கான மண்ணெண்ணெய் கிடைக்காமை, விவசாயிகளின் அறுவடை மற்றும் கால போக நெற் செய்கைக்கான டீசல் பங்கீடு, சிறுபோக நெல்லுக்கு உத்தரவாத விலை கிடைக்காமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், சிறுபோக செய்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் விவசாயிகளிடம் இருந்து அரிசி ஆலை உரிமையாளர்களால் அரசாங்க உத்தரவாத விலையை விட குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுவதானால் அதிக விலைக்கு உரம், களைநாசினி என்பவற்றை பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் நட்டம் அடைவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது. இதற்கு உடனடியாக தீர்வை முன்வைக்குமாறும் கோரப்பட்டது. இதன்போது குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையடி தீர்வைப் பெற்றுத் தருவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் திலீபன் தெரிவித்திருந்தார்.

000

Related posts:


வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்கள் அதிகம் : ஆனால் தகுதியானவர்கள் இல்லை!  - அமைச்சர் தலதா அதுகோரள!
நாவாந்துறை பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – ஈ.பி.டி.பி மாநகர சபை உறுப்பினர...
பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க ந...