விரைவில் மாகாணசபை தேர்தல் – ஆளும் தரப்பு கட்சிகளின் தலைவர்களுடன் அவசர சந்திப்புக்கு ஜனாதிபதி ஏற்பாடு!

Sunday, April 4th, 2021

ஆளுங் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்பதாக மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து இறுதி முடிவை எடுக்கும் நோக்கில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த சந்திப்பின்போது எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறைமை தீர்மானிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: