வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம்!

Saturday, July 15th, 2017

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஈச்சமோட்டை, குளத்தடிப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் நேற்று இரவு 8.30 மணியளவில் ஆவா குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குழுவொன்று அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்களை தாக்கியுள்ளது.

அத்துடன் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இந்த தாக்குதலின் போது இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்திவிட்டு குறித்த வீட்டிலிருந்து வெளியே வந்த குழுவினர் அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது, யாழ். மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் அவரது மகளும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அந்த பகுதி வழியாக முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களுடனும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: