வாகன வரி அனுமதிபத்திரம் வவுனியாவிலும் பெற்றுக்கொள்ளலாம்!

Wednesday, May 10th, 2017

வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கான வாகன வரி அனுமதிப்பத்திரம் வவுனியாவிலும் பெற்றுக்கொள்ள முடியும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார்.

இது வரை காலமும் வட மாகாணத்தில் வாகன வரி அனுமதி பத்திரங்கள் பெறுவதற்கு அந்தந்த பிரதேச செயலகங்களிற்கே செல்ல வேண்டி நிலை காணப்பட்டது.இந்த நிலையில் இன்றிலிருந்து வட மாகாணத்தில் அமைந்துள்ள எந்த மாவட்டத்தில் இருந்தும் ஒன்லைன் மூலமாக வவுனியா பிரதேச செயலகத்தில் வாகன வரி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும். இதன் முதற் கட்டமாக வவுனியா பிரதேச செயகத்தில் முதலாவது வாகன வரி அனுமதிப்பத்திரம் பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: