வழமைக்கு திரும்பிய வடக்கின் ரயில் சேவை!

வடபகுதிக்கான ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த தண்டவாள குறைபாடுகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
ரயில் சேவைகள் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த தண்டவாளம் திருத்தப்பட்டுள்ளதால் இன்று(17) காலை கொழும்பு – கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கான கடுகதி ரயில் வண்டி பயணத்தைத் தொடங்கியதாக கட்டுப்பாட்டு நிலையத்தின் பேச்சாளர் இன்று(17) காலை அறிவித்தார்.
மதவாச்சிக்கும், பரசன்-கஸ்வௌ பகுதிக்கும் இடையில் ரயில் வண்டி தண்டவாளத்தை விட்டு விலகியதால், ரயில் சேவைகள் அனுராதபுரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவர்களையும் ஆட்கொள்ளும் ஐஸ் போதை – வெளியானது அதிர்ச்சி தகவல்!
கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் "கொரோனா" – எச்சரிக்கின்றார் உல...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்...
|
|