வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் கட்டாயமில்லை – சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்கள் திரட்டுதல் முதல் கட்டாயம் இல்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் காலத்தில் கொவிட்-19 நான்காம் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையேஉடன் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் நான்காவது கொவிட் தடுப்பூசி மாத்திரையை வழங்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|